Vikravandi By Election:விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! பின் வாங்கும் அதிமுக? நீயா? நானா? போட்டிக்கு தயாராகும் பாமக

First Published Jun 12, 2024, 7:21 AM IST

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில் அத்தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான பாமகவை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Pugazhendhi

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தலோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 

Vikravandi By Election

இந்நிலையில் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 24ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 26ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும். ஜூலை 10ம் தேதி வாக்குப் பதிவும் ஜூலை 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: Vikravandi Dmk Candidate : விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த அன்னியூர் சிவா.?

DMK Candidate

இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக  முதல் ஆளாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலாளர்கள் அணி செயலாளராக உள்ளார். அதேநேரத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி போட்டியிடும் பட்சத்தில்  சி.வி.சண்முகம் கைகாட்டும் நபரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

PMK contest in Vikravandi Constituency

இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பாஜக சம்மதம் தெரிவித்து பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது. இடைத்தேர்தலில் செல்வாக்கு மிக்க பாமக மற்றும் அதிமுக போட்டியிடும் பட்சத்தில் அத்தொகுதியில் மும்முனை போட்டி மிக கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!