ரஜினி படத்தில் இருந்து கழட்டிவிட்ட லோகேஷ்... கமுக்கமாக மாஸ் இயக்குனருடன் கூட்டணி அமைத்த ரத்னகுமார்

First Published Feb 1, 2024, 9:09 AM IST

லோகேஷ் உடன் இணைந்து விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்களில் பணியாற்றிய ரத்னகுமார் தலைவர் 171 படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

Lokesh kanagaraj and Ratnakumar

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் ரத்னகுமார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அமலா பால் உடன் கூட்டணி அமைத்த அவர், ஆடை என்கிற திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் நடிகை அமலா பாலை நிர்வாணமாக நடிக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆடை படத்துக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்த ரத்னகுமார் அவர் இயக்கும் படங்களில் ஸ்கிரிப்ட் மற்றும் டயலாக் ஆகியவற்றில் பணியாற்றினார்.

Vijay, Ratnakumar

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ ஆகிய மூன்று படங்களிலும் ரத்னகுமாரின் பங்களிப்பு இருந்தது. இதில் லியோ பட சக்சஸ் மீட்டில் ரஜினிகாந்தை தாக்கும் விதமாக பேசியதால் லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படத்தில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கோரிக்கை வழுத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அவர் ரஜினி படத்தில் பணியாற்றப்போவதில்லை என்பதை லோகேஷே உறுதிபடுத்தினார்.

இதையும் படியுங்கள்... யுவன் இசை.. பாலிவுட் ஹீரோயின்.. மாசாக ரெடியாகும் சர்தார் 2 - "நடிப்பு அரக்கன்" தான் கார்த்திக்கும் வில்லனா?

Ratnakumar not in Thalaivar 171

ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பு காரணமாக அவர் தலைவர் 171 படத்தில் சேர்க்கப்படவில்லை என கருதினர். ஆனால் உண்மையில், லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்க ரத்னகுமார் கமிட் ஆகினார். அந்த பட வேலைகளில் பிசியான காரணத்தால் தான் அவரால் தலைவர் 171 படத்தில் பணியாற்ற முடியாமல் போனது. இந்த நிலையில், தற்போது லோகேஷ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம் தாமதம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ratnakumar joins in sardar 2

அதன் காரணமாக வேறு ஒருபடத்தில் இணைந்துவிட்டாராம் ரத்ன குமார். அது வேறெதுவும் இல்லை, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள சர்தார் 2 படம் தான். அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் உடன் இணைந்து ரத்னகுமார் பணியாற்றி வருகிறாராம். தற்போது பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் ஷூட்டிங் நிறைவடைந்ததும் சர்தார் 2 திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஜப்பான் படம் சரியா போகவில்லை... ரெடியாகும் Sequels - மாஸ் காட்ட காத்திருக்கும் கார்த்தியின் 3 படங்கள்!

click me!