தேவதை வம்சம் நீயோ! நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பட்டு புடவையில்... பேரழகியாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

First Published Mar 26, 2024, 7:26 PM IST

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பட்டு புடவையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 

நட்சத்திர தம்பதியான, விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூன்று மகள் தான் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக 'ரிக்ஷா மாமா' படத்தில் அறிமுகமான இவர்... பின்னர் பருவ வயதை எட்டியதும், ஹீரோயினாக அவதாரம் எடுத்தார்.

இயக்குனர் கதிர் இயக்கத்தில், தல அஜித்தின் மச்சினன்...ரிச்சர்ட் ஹீரோவாக நடித்த, 'காதல் வைரஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும், அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்று தந்தது.

Breaking: மாடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லொள்ளு சபா சேசு காலமானார்!

இதை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே, மாதவனுடன் பிரியமான தோழி, தனுஷ் ஜோடியாக தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் பொன்னர் மொழிகளிலும் நடித்தார் ஸ்ரீதேவி. தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், திடீர் என திரையுலகில் இருந்து விலகி.. ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர், திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய ஸ்ரீதேவி குழந்தை - குடும்பம் என பொறுப்பான குடும்ப தலைவியாக உள்ளார். 

Siragadikka Aasai: அடடா முத்து பிரச்சனை பண்ணுவாருனு பார்த்தா.. விஜயா முந்திக்கொண்டாரே? சிறகடிக்க ஆசை அப்டேட்!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக மாறிய ஸ்ரீதேவி... அடிக்கடி விதவிதமான உடையில், போட்டோ ஷூட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்த வகையில் தற்போது... ட்ரடிஷ்னல் மோடில், பிரவுன் கலர் பட்டு புடவையில்... பிரகாசிக்கும் பேரழகில் வெளியிட்டுள்ள போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Inimel Song: லோகேஷ் கனகராஜை 'இனிமேல்' ஆல்பம் பாடலின் நான் தேர்வு செய்தது இப்படி தான்? ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!
 

click me!