சிவப்பு சேலை கட்டிய சொர்க்கம்.. கண்களால் மயக்கும் ஸ்ருதிஹாசன்.. க்யூட் போட்டோஸ்..

First Published May 4, 2024, 4:12 PM IST

நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் 2009-ம் ஆண்டுவெளியான லக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ருதிஹாசன்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.  குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

எனினும் சமீப காலமாக தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்களுக்கு குறிப்பாக தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். தெலுங்கி பல வெற்றி படங்களை கொடுத்த அவர், கடைசியாக சலார் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துடன், பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. இந்த படத்தின் 2-ம் பாகமும் உருவாகி வரும் நிலையில், ஸ்ருதிஹாசன் அதிலும் நடித்து வருகிறார். 

நடிப்பு மட்டுமின்றி இசையிலும் ஸ்ருதிஹாசனுக்கு ஆர்வம் அதிகம். இன்னும் சொல்லப்போனால் இசையமைப்பாளராக தனது கெரியரை தொடங்கினார்ல் தனது தந்தையின் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான எடிசன் விருது ஸ்ருதிக்கு கிடைத்தது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் பல பாடல்களை பாடி உள்ளார். இதன் மூலம் பிரபல பாடகியாக அவர் அறியப்படுகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்ற மியூசிக் ஆல்பம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் சேர்ந்து ஸ்ருதியும் நடித்திருந்தார். 

சமூக வலைதலங்களில் ஆக்டிவாக ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் புடவையில் இருக்கும் க்யூட் போட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

click me!