பீச்சில் படு கிளாமரான உடையில் கிறங்கடிக்கும் ஷில்பா மஞ்சுநாத்.. ஹாட் போட்டோஸ் இதோ..

First Published Apr 26, 2024, 7:53 PM IST

நடிகை ஷில்பா மஞ்சுநாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் படு கிளாமராக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

முன்கரு என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். இந்த படம் கன்னட திரையுலகில் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு எமன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் ஷில்பாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. 

இதனால் தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல படங்களில் ஷில்பா நடிக்க தொடங்கினார். இதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறினார்.

விஜய் ஆண்டனியின் எமன் படத்தை தொடர்ந்து அவர் தமிழிலும் பல படங்களில் நடித்தார். காளி படத்தில் மீண்டும் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். 

அதன்பின்னர் ஹிரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை ஈர்த்தா ஷில்பா. 

இதை தொடர்ந்து ரோசாப்பூ என்ற் படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் எண்ட்ரி கொடுத்தார். மேலும் தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது சிங்கப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் ஷில்பா. இதே போல் தெலுங்கு, கன்னட படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் படு கிளாமராக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்களும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. 

click me!