Sai Pallavi: டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி....அப்போ கல்யாணம்னு சொன்னது ..? குழம்பிப்போன நெட்டிசன்கள்

First Published May 22, 2022, 1:00 PM IST

Sai Pallavi Latest news: மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நடிகை சாய் பல்லவி. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்துள்ளார்

sai pallavi

சாய் பல்லவி, தமிழில் தியா, NGK, மாரி 2 உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு  ஜோடியாக நடித்துள்ளார். இருப்பினும், சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. தற்போது அம்மணி தெலுங்கில் டாப் நடிகை. 
 

sai pallavi

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, சாய் பல்லவியின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. நடிகை சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள விராட பருவம் ஜூலை 1-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து, சாய் பல்லவிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், விரைவில் திருமணம் என்றும் சினிமாவிற்கு சிறுது இடைவெளி விட்டுவிட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. 

sai pallavi

இந்நிலையில், விராட பருவம் படத்திற்கு பிறகு நடிகை சாய் பல்லவி, பிரபல பான் இந்தியா ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்குக்கு ஜோடியாக, நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில்,  பான் இந்தியா திரைப்படமான உருவாகும் இந்த படத்தில், ஆலியா பட் விலகியதை அடுத்து சாய் பல்லவியை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Sai Pallavi

மேலும், சிவகார்த்திகேயன்  நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தெலுங்கில் அறிமுகமாக உள்ள SK21 என்ற படத்தில் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த தகவல்களை கேள்விப்பட்ட ரசிகர்கள், அப்ப சாய் பல்லவிக்கு  விரைவில் திருமணம்? அதனால், அவர் படங்களில் கமிட்டாகவில்லை என்று சொன்னதெல்லாம் பொய்யா..? என்ற குழப்பத்தில் உள்ளனர். ஒரு சிலர், வதந்திகளுக்கு சாய் பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர். 

 மேலும் படிக்க....Pooja Hegde Cannes: கேன்ஸ் பட விழாவில் ஆடையின்றி தவித்த பீஸ்ட் பட நாயகி....சாப்பிடாமல், தூங்காமல் தவித்த சோகம்

click me!