காதல் மற்றும் புன்னகை.! ஹல்தி நிகழ்ச்சியில் பொங்கி வழிந்த காதல்.. ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட போட்டோஸ்!

First Published Feb 28, 2024, 10:49 PM IST

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய ஹல்தி நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட, ரசிகர்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.
 

தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க படம் மூலம் அறிமுகமானவர்  ரகுல் ப்ரீத் சிங். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் தமிழக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்த இவருக்கு அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், ஒரு படம் கூட தேறாததால் ராசி இல்லாத நடிகை என ஓரம் கட்டப்பட்டார்.

தமிழ் பட வாய்ப்பு கிடைக்காததால், முழுமையாக தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கவனத்தை செலுத்திய ரகுல், கவர்ச்சியை கட்டவிழ்த்து டோலிவுட் ரசிகர்களை கிளீன் போல்ட் ஆக்கினார். தொடர்ந்து தெலுங்கில் டாப் நடிகர்களுக்கு ஜோடி போடும் அளவுக்கு ஆளானதால்... தமிழ் திரையுலகம் மீண்டும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து அம்மணிக்கு வாய்ப்பு கொடுத்தது.

பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு.. அமெரிக்காவில் நடைபெற்ற பிரம்மாண்ட பாராட்டு விழா!

அப்படி 5 வருடங்களுக்கு பின் இவர் தலைகாட்டிய படம் தான் 'தீரன் அதிகாரம் ஒன்று', இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக 'தேவ்', சூர்யாவுடன் NGK போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அயலான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கிய ரகுல், பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானி காதலில் சிக்கினார். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவருடன் டேட்டிங் செய்து வந்த ரகுல்  ஒருவழியாக, அண்மையில் திருமண உறவிலும் இணைந்தார். திருமணத்தை தொடர்ந்து அவ்வப்போது, தங்கள் திருமண சங்குகளில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வரும் ரகுல் தற்போது ஹல்தி நிகழ்ச்சியில் காதல் பொங்கி வழிந்த மொமெண்ட் பற்றிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

No மேக்கப் லுக்! சிங்கிள் ப்ரீட் சேலையில்... ரசிகர்கள் மனதை புன்னகையால் கொள்ளைகொள்ளும் ஹன்சிகா போட்டோஸ்!

click me!