எளிமையான புடவையில்... எக்கச்சக்க அழகு! நயன்தாரா ஹேர் ஸ்டைலில் ரசிகர்களை கவரும் பிரியா பவானி ஷங்கர்! போட்டோஸ்

First Published Nov 29, 2023, 7:15 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர்... எளிமையான பச்சை நிற புடவையில் பொங்கும் அழகில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

இன்ஜினீயரிங் படித்தாலும் பரவாயில்லை ஒரு செய்தியாளராக மாற வேண்டும் என்று விடாப்பிடியாக... பிரபல தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை துவங்கியவர் தான் பிரியா பவானி ஷங்கர். இதை தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் இவர் வீட்டு கதவை தட்ட, 'கல்யாணம் முதல் காதல் வரை' என்கிற சீரியலில் நடிக்க கமிட் ஆனார்.

இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே... இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், உருவான 'மேயாத மான்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பிரியா பாவானிக்கு அடுத்தடுத்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, ஹாஸ்டல் என பல படங்கள் வரிசை கட்டியது.

சிக்ஸ் பேக்கில் மிரட்டும் உறியடி விஜயகுமார்! மாஸ் டைட்டிலுடன் வெளியான லோகியின் முதல் தயாரிப்பின் ஃபர்ஸ்ட் லுக்

தற்போது சுமார் அரைடஜன் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய காதலனுடன் எடுத்து கொள்ளும் போட்டோஸ் மற்றும், தன்னுடைய ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்தவகையில் தற்போது பச்சை நிற சேலையில்... அழகு தேவதை போல் ஜொலிக்கும் புகைப்பங்களை வெளியிட்டுள்ளார். இதில் பிரியா பவானி, பிளாக் மென்டல் நெக் பீஸ் மற்றும் கம்மல் அணிந்துள்ளார். மேலும் நயன்தாரா ஸ்டைலில் குண்டை போட்டு, அதில் பூ சுற்றி... இளம் நெஞ்சங்களை ஏங்க வைத்துள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டுள்ளது.

Vijayakanth Net Worth: கட்சிக்காக சொத்தை இழந்து... மக்களை உயிராக நினைக்கும் கேப்டானின் சொத்து மதிப்பு விவரம்!

click me!