வித்தியாசமான முகங்கள்..! பாலிவுட் போனதும்... அல்ட்ரா மாடர்ன் பேபியாக மாறிய கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்

First Published Feb 26, 2024, 2:36 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், இரண்டு வித்தியாசமான முகங்களை கொண்ட உடை அணிந்து... அல்ட்ரா மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

தென்னிந்திய திரையுலகில் தன்னுடைய அம்மா மேனகாவை தொடர்ந்து, ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகைகள் பலர் வந்த வேகத்தில்... சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், அன்று முதல் இன்று வரை நிலைத்து நின்று கெத்து காட்டி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் ஏற்கனவே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக... பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், 2016-ஆம் ஆண்டு வெளியான 'தெறி' படத்தின் ரீமேக்காக உருவாகும் பேபி ஜான் படத்தில் சமந்தா ஏற்று நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். 

இந்த படத்தை இயக்குனர் காலீஷ் இயக்க, இயக்குனர் அட்லீ தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் அட்லீ பாலிவுட் திரையுலகில் ஒரு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி சீரியலுக்காக... வாய்ப்பு கொடுத்த சன் டிவி தொடருக்கு குட்பை சொன்ன நடிகை! விலக இது தான் காரணமாம்!

பாலிவுட் படம் ஒருபுறம் இருந்தாலும், மகாநடி வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் கீர்த்தி, தற்போது தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் வெளியாக உள்ளது.

நடிப்பில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் பூர்ணிமாவா இது? கடற்கரையில் கவர்ச்சி புயலாக மாறி போட்டோஷூட் நடத்தியதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற அல்ட்ரா மாடன் உடையில்... இரண்டு முகங்கள் கொண்ட வித்தியாசமான உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

click me!