ஹன்சிகா மோத்வானியா இது? டோடல் லுக்கை மாற்றி இரட்டை வேடத்தில் கலக்க வரும் நாயகி - காந்தாரி கம்மிங் சூன்!

First Published Feb 29, 2024, 4:26 PM IST

Actress Hansika Motwani : பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பிரபல இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் காந்தாரி என்ற படத்தில் அவர் நடித்து வருகின்றார். 

Hansika

குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாயகியாகவும் நடிக்க தொடங்கினார். இந்த சூழ்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தமிழில் வெளியான தனுஷின் "மாப்பிள்ளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக இவர் அறிமுகமானார்.

நடிகர் அஸ்வின் ககுமனுவின் தாயார் இந்த நடிகையா? அவர் நடித்து வெளியான படத்தின் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

Ganthari hansika

தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, தளபதி விஜய், சிம்பு, தனுஷ், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "மகா" என்கின்ற திரைப்படம் தான் அவருடைய ஐம்பதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Shirish

இந்த ஆண்டு ஏற்கனவே தமிழில் 3 திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி, தற்பொழுது இயக்குனர் கண்ணன் இயக்கும் "காந்தாரி" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மசாலா பிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் இரட்டை வேடங்களில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஹன்சிகா மோத்வானி இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்தது இவர் தான்! உங்க மூஞ்சி செட் ஆகலனு திருப்பி அனுப்பிய இயக்குனர்!

click me!