Anjali Photos : சேலையில் ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறிய நடிகை அஞ்சலி... கட்டழகை காட்டி மயக்கும் கவர்ச்சி போட்டோஸ் இதோ

First Published Apr 15, 2024, 1:50 PM IST

ரெட் ஹாட் சேலை அணிந்து கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களுடன் நடிகை அஞ்சலி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் அஞ்சலி. இதையடுத்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, அங்காடித் தெரு போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவை விட்டே ஒதுங்கினார்.

அதுமட்டுமின்றி நடிகர் ஜெய் உடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார் அஞ்சலி. இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பின்னர் சில ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார் அஞ்சலி.

இதையடுத்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன நடிகை அஞ்சலி, சைலன்ஸ் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். உடல் எடையை குறைத்த பின்னர் கவர்ச்சி தூக்கலாக நடித்து வரும் அஞ்சலி, முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார்.

இதையும் படியுங்கள்... Keerthy: பாலிவுட் போனாலும் பாரம்பரியத்தை மறக்காத நடிகை கீர்த்தி சுரேஷின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ

தற்போது நடிகை அஞ்சலி கைவசம் தமிழில் ஏழு மலை ஏழு கடல் திரைப்படம் உள்ளது. ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அஞ்சலி. இதுதவிர பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அஞ்சலி, அத்துடன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். சேலையில் ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறி நடிகை அஞ்சலி நடத்தி உள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Nayanthara Photos : குறையாத காதலுடன்... குழந்தைகளோடு ஜம்முனு தமிழ் புத்தாண்டை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி

click me!