ரூ.229 கோடி சொத்து மதிப்பு, ஆடம்பர வீடு.. சினிமாவை போலவே பிசினஸிலும் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகை..

First Published Mar 19, 2024, 12:33 PM IST

சினிமாவில் எப்படி வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறாரோ அதே போல் பிஸினஸிலும் கொடி கட்டி பறக்கிறார் ஆலியா பட்.

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், பிரம்மாஸ்திரா 1,: ஷிவா, கங்குபாய் கதிவாடி, கல்லி பாய் மற்றும் ராஷி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 7 படங்கள் 100 கோடி வசூலை தாண்டியுள்ளன. சமீபத்தில் ஆலியா ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற ஹாலிவுட் தொடரில் நடித்திருந்தார்.

சினிமாவில் எப்படி வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறாரோ அதே போல் பிஸினஸிலும் கொடி கட்டி பறக்கிறார். குழந்தைகளுக்கான விளையாட்டு உடைகளை வழங்கும் Ed-a-Mamma என்ற நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் ஆலியா பட் வணிக உலகில் நுழைந்தார். படைப்பாற்றலுடன் ஆடைகளை தயாரிக்கும் அதே நேரத்தில் ஆடை வடிவமைப்பில் சமரசம் செய்யாமல் நிலையான விருப்பங்களை வழங்கி வருகிறார். Ed-a-Mamma நிறுவனம் தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள்ளேயே ரூ.150 கோடி மதிப்புடையதாக மாறி உள்ளது.

மேலும் ஐஐடி கான்பூரின் D2C ஆரோக்கிய நிறுவனமான Phool.Co என்ற பிராண்டில் ஆலியா பட் முதலீடு செய்துள்ளார். அவர் எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை, ஆனால் நிலையான மற்றும் பூமிக்கு தீங்கு விளைவிக்காத நுகர்பொருட்களை உருவாக்கும் ஆலியா பட்டின் நோக்கம் இந்த முதலீட்டில் பிரதிபலிக்கிறது.

செல்வாக்கு மிக்க மற்றும் வெற்றிகரமான பெண்ணான ஆலியா பட், மற்ற பெண்களையும் வணிகத்தில் மேம்படுத்துவதற்கான முயற்சியை எடுத்துள்ளார். ஜூலை 2020 இல் பெண்களுக்குச் சொந்தமான ஸ்டார்ட் அப் நிறுவனமான Nykaa இன் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஆலியா பட்டும் ஒருவர். Nykaa நிறுவனத்தின் அவரின் தலீடு சில மாதங்களில் 10 மடங்கு அதிகரித்து ரூ.54 கோடியாக உயர்ந்தது.

பெண்களுக்கு சொந்தமான மற்றொரு வணிகமான  மும்பையை தளமாகக் கொண்ட தனிப்பட்ட ஸ்டைலிங் தளமான ஸ்டைல் கிராக்கர் (Style Cracker )என்ற பெயரில் முதலீட்டாளராக இருந்து வருகிறார்.

நெட்பிளிக்ஸில் வெளியான டார்லிங்ஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் மாறினா ஆலியாபட.  'எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ்' (Eternal Sunshine Productions’.)என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் வைத்திருக்கிறார்.

சினிமா, தொழில் என இரண்டிலும் கலக்கி வரும் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு ரூ.299 கோடியாக உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறார். இதனால் அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்..

ஆலியா பட்டின் அபார்ட்மெண்ட் 13.11 கோடி ரூபாய் மதிப்புடையது, இது மும்பையின் பாந்த்ராவின் ஆடம்பரமான பகுதியில் அமைந்துள்ளது. அவருக்கு இரண்டு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆலியா பட் BMW 7 சீரிஸ், ஆடி A6, ஆடி க்யூ7 மற்றும் ரேஞ்ச் ரோவர் வோக் உட்பட பல ஆடம்பர கார்களையும் வைத்திருக்கிறார். இந்த சொகுசு கார்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பிரம்மாஸ்த்ரா படத்தில் நடித்த போது ஆலியா பட் - ரன்பீர் கபூர் காதலிக்க தொடங்கினர். பின்னர் டேட்டிங்கில் இருந்த இந்த ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ராஹா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!