படக்குனு பஞ்சவர்ண கிளி போல மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஸ்டைலிஷ் ஆடையில் செம போஸ் - வைரல் போட்டோஸ் இதோ!

First Published Feb 27, 2024, 4:04 PM IST

Actress Aishwarya Rajesh : கடந்த 2023ம் ஆண்டு தமிழில் வெளியான தீரா காதல் என்ற படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்பொது மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து வருகின்றார். 

Aishwarya Rajesh

தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலை உலகில் பயணிக்க ஆரம்பித்த நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "காக்கா முட்டை" என்கின்ற திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 

டார்ச்சர் பண்ணிய பாண்டியம்மா... கழுத்தில் அருவா வைத்து மரண பயத்தை காட்டிய இசக்கி - அண்ணா சீரியல் டுவிஸ்ட்

Aishwarya

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான "டாடி" என்கின்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இதுதான் அவருடைய முதல் இந்திய திரைப்படமாகும். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh Photo

கடந்த 2022 ஆம் ஆண்டு OTT தளத்தில் வெளியான "சுழல்" என்கின்ற இணைய தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அது அவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது. இந்நிலையில் அந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

Aishwarya Rajesh Photos

ஹாலிவுட் உலகில் வெளியான "தி லைன் கிங்" என்ற திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்ட பொழுது, அதில் "நலா" என்கின்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Photos

இந்த 2024 ஆம் ஆண்டு அவருடைய நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ் மற்றும் மலையாள ஆகிய மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனருடன் இணையும் சந்தானம்.. நாளை வெளியாகும் டைட்டில் & First Look - வெளியிடப்போவது யார் தெரியுமா?

click me!