Anitha Vijayakumar : ஒரு டாக்டரா சொல்றேன்.. இதை மட்டும் செய்யாதீங்க.. விஜயகுமார் மகள் அனிதா அட்வைஸ்..

First Published Mar 22, 2024, 9:28 AM IST

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் என்று விஜயகுமார் மகள் அனிதா விஜயகுமார் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்..

பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் மனைவியான முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார்.

விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதில் வனிதா மட்டும் குடும்ப தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். அவரை தவிர மற்ற 5 பிள்ளைகளும் ஒற்றுமை உடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா கத்தார் நாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 

Anitha vijayakumar

அனிதாவின் மகள் தியாவும் மருத்துவராக இருக்கிறார். சமீபத்தில் தான் தியாவுக்கும் இவருக்கும் திலன் என்பவருக்கும்  பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணம் இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகின.

Anitha Vijayakumar

மருத்துவராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் பியூட்டி டிப்ஸ், ஹெல்த் டிப்ஸ் போன்றவற்றையும் பகிர்ந்து வருகிறார். 

Anitha Vijayakumar

அந்த வகையில் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ தினமும் மன உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் தூங்க செல்லுங்கள். உங்களிடம் இல்லாததற்கு ஆசைப்பட்டு, இருப்பதை கெடுக்க வேண்டாம்.

வாழ்க்கையின் உண்மையான செல்வமே நேரம் தான். அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். பலருக்கு எந்த ஒரு அசௌகரியத்தையும் ஏற்படுத்தாமல் மரணம் வந்து கொண்டிருக்கிறது..நான் 25 ஆண்டுகளாக அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவராக இருந்த அனுபவத்தில் இதை சொல்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!