1 வயது முதலே நடித்து வரும் சிம்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..

First Published Feb 3, 2024, 7:56 AM IST

நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

நடிகர் சிம்பு இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் – உஷா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சிலம்பரசன். தனது அப்பாவின் இயக்கத்தில் சிறு வயது முதலே நடித்து வருகிறார். சிறுவயது என்றால் 1 வயது. ஆம். 1 வயது குழந்தையாக இருக்கும் போதே 1984-ம் ஆண்டு உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிம்பு.

இதை தொடர்ந்து டி.ராஜேந்தர் இயக்கிய மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கிதம், ஒரு வசந்த கீதம், என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் சிம்பு.

Simbu

பின்னர் 2002-ம் ஆண்டு தான் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இதை தொடர்ந்து தம், அலை, குத்து, கோயில், மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா , வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணை தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Manmadhan

இதில் மன்மதன் படத்திற்கு திரைக்கதை எழுதிய அவர், வல்லவன் படத்தை தானே இயக்கியும் நடத்திருப்பார். கோவா, கண்ணா லட்டு தின்ன ஆசையா, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களிலும் கெஸ்ட் ரோலிலும் நடித்திருப்பார்.

வெற்றி தோல்வியை மாறி மாறி ரசித்து வந்த சிம்பு இடை இடையே சில தோல்வி படங்களையும் கொடுத்து வந்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார். தற்காலிகமாக எஸ்டிஆர் 48 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

தற்போது நடிகர் சிம்பு ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 1 வயது முதல் நடித்து வரும் சிம்புவின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடி கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை தவிர அடம்பர கார்கள், பங்களா என பல சொத்துக்களை சிம்பு வைத்துள்ளார். பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

click me!