Vandana Srikanth : ஹீரோயின்களை மிஞ்சும் அழகு.. நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்

First Published Apr 4, 2024, 11:08 AM IST

நடிகர் ஸ்ரீகாந்த் தனது மனைவி வந்தனா உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

சசி இயக்கிய ரோஜா கூட்டம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இதையடுத்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். 

ஸ்ரீகாந்த் - வந்தனா ஜோடிக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இருவரும் இன்றளவும் இளமை குறையாமல் அப்படியே இருக்கின்றனர். அதில் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா, நடிகை நதியா போல் வயசாக வயசாக இளமையாகிக் கொண்டே இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும் அவரது மனைவி வந்தனாவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை வந்தனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்... Ajithkumar : யார்க்கர் கிங் நடராஜனின் பிறந்தநாள்... கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் - வைரலாகும் போட்டோஸ்

ஸ்ரீகாந்த் பட்டு வேஷ்டி சட்டையிலும் அவரது மனைவி வந்தனா பட்டுசேலையும் அணிந்து திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் ஜோடியாக சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் இருவருக்கும் வயசே ஆகாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ உங்கள் இருவரின் பியூட்டி சீக்ரெட்டை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் - வந்தனா ஜோடிக்கு அஹானா என்கிற மகளும், ஆஹில் என்கிற மகனும் உள்ளனர். இதில் ஸ்ரீகாந்தின் மகன் ஆஹிலுக்கு 15 வயது ஆகிறது, அவரது மகள் அஹானாவுக்கு 13 வயது ஆகிறது.

பார்ப்பதற்கு ஸ்ரீகாந்தும் வந்தனாவும் இளம் ஜோடி போல இருந்தாலும் அவர்களுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகன் மற்றும் மகள் இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... Indraja Reception : மாமியாருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தமா? சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர் மருமகன்..

click me!