இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 4.9 சதவீதம் அதிகரிப்பு!

By Manikanda Prabu  |  First Published May 12, 2024, 4:18 PM IST

இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு நடப்பாண்டு மார்ச் மாதம்  4.9 சதவீதம் அதிகரித்துள்ளது


நடப்பாண்டு மார்ச்  மாதத்தில், 2011-12 அடிப்படையுடன் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள்  159.2 ஆக உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 156.1, 155.1 மற்றும் 204.2 ஆக உள்ளன. தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12ஆம் தேதி வெளியிடப்படுகின்றன (12ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் அதற்கு முந்தைய வேலை நாளில் வெளியிடப்படுகின்றன). அந்த வகையில், 2024 மார்ச் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண் வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 4.9 சதவீதமாக உள்ளது. 2023 மார்ச் மாதத்தை விட 2024 மார்ச் மாதத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.2 சதவீதம், 5.2 சதவீதம் மற்றும் 8.6 சதவீதமாகும்.

Tap to resize

Latest Videos

2023-24 ஏப்ரல்-மார்ச்  காலகட்டத்தில் முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக இருந்தது. 2023-24 ஏப்ரல்-மார்ச் காலகட்டத்தில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதங்கள் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட முறையே 7.5 சதவீதம், 5.5 சதவீதம் மற்றும் 7.1 சதவீதமாக இருந்தது.

பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி, 2024  மார்ச் மாதத்தில் முதன்மைப் பொருட்களுக்கு 162.2, மூலதனப் பொருட்களுக்கு 130.5, இடைநிலைப் பொருட்களுக்கு 167.5, உள்கட்டமைப்பு / கட்டுமானப் பொருட்களுக்கு 194.2 எனக் குறியீடுகள் உள்ளன. மேலும், 2024 மார்ச்  மாதத்தில் நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத பொருட்களுக்கான குறியீடுகள் முறையே 129.9 மற்றும் 154.7  ஆக உள்ளன.

இந்த பேங்கில் வங்கி கணக்கு வைத்திருக்கிருக்கிறீர்களா.. ஜூன் 1 முதல் பேங்க் அக்கவுண்ட் மூடப்படும்..

மார்ச் 2023 ஐ விட மார்ச் 2024 இல் பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி IIP இன் தொடர்புடைய வளர்ச்சி விகிதங்கள் முதன்மை பொருட்களில் 2.5 சதவீதம், மூலதன பொருட்களில் 6.1 சதவீதம், இடைநிலை பொருட்களில் 5.1 சதவீதம், உள்கட்டமைப்பு / கட்டுமான பொருட்களில் 6.9 சதவீதம், நுகர்வோர் சாதனங்களில் 9.5 சதவீதம் மற்றும் நுகர்வோர் நீடித்தவற்றில் 4.9 சதவீதம் ஆகும்.

click me!