Sayaji Shinde: நெஞ்சுவலி காரணமாக பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

First Published Apr 12, 2024, 4:32 PM IST

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே கடுமையான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உடல் நலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட பன்மொழி படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்த பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே.  தமிழில் இவர் முண்டாசுக் கவிஞன், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பாரதியாராக நடித்து மிகவும் பிரபலமானார். பாரதியாரின் வாழ்வியலையும் அவரது கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக கண் முன் நிறுத்திய பெருமை இவரையே சேரும்.

பாரதி படத்திற்கு பின், தமிழில் மிகவும் பிஸியான நாடியினராக மாறிய சாயாஜி ஷிண்டே... அஜித் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்', ரஜினிகாந்த் நடித்த 'பாபா' விக்ரமுடன் 'தூள்', தனுஷுடன் 'படிக்காதவன்', விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதே போல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

22 வருடங்களுக்கு பின் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹிட் கொடுத்த சீயான்!

65 வயதாகும் சாயாஜி ஷிண்டேவுக்கு, இன்று காலை அவர் வீட்டில் இருக்கும் போது திடீர் என கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அவரது குடும்பத்தினர், சாயாஜி ஷிண்டேவை ஹுடாஹுட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்திற்கு செல்லும் ரத்தம் குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் பின்னர் ஆஞ்சியோபிளாஸ்டி செய்துள்ளனர். மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர் கூறியுள்ளனர். 

எனவே இன்னும் ஓரிரு நாளில், சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யப்படுவார் என தெரிகிறது. ஏற்கனவே ஒருமுறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மாரடைப்புக்கு பின்னர் தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டார் சாயாஜி ஷிண்டே.

Yash: உலக புகழ்பெற்ற காவியமான 'ராமாயணத்தை' திரைப்படமாக தயாரிக்கும் ராக்கிங் ஸ்டார் யாஷ்! வெளியான அறிவிப்பு!

click me!