Ramarajan Sister Death: நடிகர் ராமராஜனை கண்ணீரில் ஆழ்த்திய மரணம்! கதறியபடி.. சொந்த ஊருக்கு புறப்பட்டார்!

First Published May 4, 2024, 6:30 PM IST

பிரபல நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி, புஷ்பாவதி உடல்நல குறைவு காரணமாக திடீர் என உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ramarajan

துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக மாறியவர்களில் முக்கியமானவர் ராமராஜன். ராமநாராயணன் இயக்கிய சுமார் 20-திற்கும் மேற்பட்ட படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய ராமராஜன், மீனாட்சி குங்குமம் என்கிற படத்தில் கூட்டத்தோடு கூடமாக வந்து செல்லும் ரோலில் நடித்தார்.

இப்படி பல படங்களில் நடித்து கொண்டிருந்த போது, நம்ப ஊரு நல்ல ஊரு என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார். பின்னர் இவர் நடித்த 'நம்ப ஊரு பாட்டுக்காரணன்', இவர்கள் இந்தியர்கள், ஒன்று எங்கள் ஜாதியே என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். சில படங்களை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்த ராமராஜன்... துணை இயக்குனராக இருந்த போது காதலித்த நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பணத்தாசை பிடித்தவர் இளையராஜா? பாடல் உரிமை தயாரிப்பாளருகே சொந்தம்.. உதாரணத்தோடு கூறிய தயாரிப்பாளர் கே.ராஜன்!

 நளினியை கடத்தி கொண்டு போய் இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், பின்னர் ஊரறிய திருமணம் நடந்தது. திரையுலகை தொடர்ந்து அரசியலில் ராமராஜன் கவனம் செலுத்த துவங்கியபோது, நளினி - ராமராஜன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு 2000-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. நளினி தன்னுடைய இரட்டை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, இன்று ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அதே நேரம், தற்போது வரை தன்னுடைய கணவருடன் நட்பு ரீகியாக பழகி வருகிறார்.

ராமராஜனின் சொந்த ஊர் மதுரை. இவரின் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் என அனைவருமே அங்கு தான் உள்ளனர். இந்நிலையில் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பாவதி. 75 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் இன்றி இருந்ததாக கூறப்படுகிறது. இவர் இன்று மாலை... மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். சகோதரி மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ராமராஜன் கண்ணீருடன் மேலூருக்கு விரைந்துள்ளார். இவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Regina Cassandra: 12 வயது சிறுவனால் புது முயற்சியில் இறங்கிய நடிகை ரெஜினா! சமூக பணிக்காக குவியும் பாராட்டுகள்!

click me!