Ajith: சூப்பர் ஹிட் படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த கிருஷ்ணா! தட்டி தூக்கிய இளம் ஹீரோ?

First Published Apr 9, 2024, 10:49 PM IST

சூப்பர் ஹிட் படம் ஒன்றில்,  தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை... நடிகர் கிருஷ்ணா நிராகரித்துவிட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

தல அஜித் நடிப்பில், 2013 ஆம் ஆண்டு சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு... ரூபாய் 130 கோடி வரை வசூல் செய்த திரைப்படம் 'ஆரம்பம்'. இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார், மேலும் ஆர்யா, டாப்ஸி, ராணா டகுபதி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

vishnu varadhan

விஷ்ணு வரதன் இயக்கிய இந்த படம், அஜித்துக்கு  பக்கா ஆக்க்ஷன் திரைப்படமாகவும், ஹேக்கிங் தொழில்நுட்பம் குறித்து பேசும் படமாகவும் அமைந்தது. 

Gayathrie: கோலிவுட் மியா காலிஃபா இவங்க தான் போலயே..! லோ அங்கிள் கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட காயத்ரி ஷங்கர்!

ஆரம்பம் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை, பேசக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது. இதற்க்கு காரணம் இப்படத்தின் கதையும் , அதை ஹாலிவுட் தரத்திற்கு இயக்கி இருந்த இயக்குனர் விஷ்ணு வரதனும் தான். அதே போல் இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில்  இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தில் ஆர்யா நடித்திருந்த ஹேக்கர் வேடத்தில், முதலில் நடிக்க இருந்தது... நடிகர் கிருஷ்ணா தானாம். ஆனால் இந்த வேடம் தனக்கு செட் ஆகுமா? என்கிற யோசனையினாலும்... மற்ற படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பின்னர் இதை நினைத்து வருத்தப்பட்டதும் உண்டு என அவரின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறுவது உண்டு.

Aishwarya Rajinikanth: 42 வயதில் ஐஸ்வர்யா இளமைக்கு இந்த 9 பழக்கம் தான் காரணம்! வேண்டுகோளுடன் பகிர்ந்த ரகசியம்!

click me!