Atharvaa Cheating Money: அரசியல்வாதிகளை வைத்து மிரட்டும் அதர்வா! தயாரிப்பாளர் மதியழகன் பரபரப்பு குற்றச்சாட்டு!

First Published Sep 14, 2023, 5:12 PM IST

நடிகர் அதர்வா 6 கோடிக்கு பணத்தை ஏமாற்றிவிட்டதாக தயாரிப்பாளர் மதியழகன் கூறியுள்ள புகார், தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதுகுறித்து தயாரிப்பாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "நான் ETCETERA எண்டர்டெயின்மெண்ட் என்கிற  சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய நிறுவனத்தின் மூலமாக நான் சினிமாத்துறையில் நல்லதொரு பெயர் பெற்றுள்ளேன். கடந்த 5.3.2018 அன்று, நடிகர் முரளியின் மகன் அதர்வா நடத்தி வரும், கிக் ஆஸ் எண்டெர்டெயின்மெண்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் 'செம போதை ஆகாதே' என்ற முழு நீள படம் தயாரிப்பாகவும், அதற்கு உங்கள் நிறுவன மூலமாக அவுட்ரைட் அக்ரீமெண்ட் செய்து கொள்ளலாம் எனக்கு கூறி, நாங்கள் இருவரும் அதனை ஒப்புக்கொண்டு, அவுட்ரைட் அக்ரீமெண்டில் கையொப்பம் மிட்டோம். மேற்படி குறிப்பிட்ட ஒப்பந்தத்தை, ரூபாய் 5 கோடியே 50 லட்சம் மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டு, செம போதை ஆகாதே என்ற தமிழ் படத்தினை 29.3.2018 அன்று வெளியிடுவதாக உறுதியளித்தனர்.
 

ஆனால் சொன்ன தேதியில் படத்தினை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஆகையால் அவுட்ரைட் ஒப்பந்தத்தில் காலதாமதம் ஏற்பட்டு, அது அவுட்டர் அக்ரீமெண்ட் ஆக ஏற்றுக்கொள்ளப்படாமல் விநியோகஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டது. எனவே என்னிடம் படத்தினை வாங்கிக் கொண்ட அனைவருக்கும் விநியோகஸ்தர் என்ற முறையில் ஏற்பட்ட நஷ்டத்தை நான்தான் சரி செய்ய வேண்டும் எனக் கூறி அதனை நான் ஏற்றுக்கொண்டு, இழப்பீடு தொகையை குறிப்பிட்ட சதவீத கணக்கில் கொடுத்து சரி செய்து விட்டேன். இது சம்பந்தமாக கிக் ஆஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திடம் கேட்டதற்கு, எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தாமல் ஏமாற்றும் நோக்கத்தில் என்னை ஏமாற்றி பண மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி செய்து வருகிறது.

மிஸ் யூ சார்..! ஆதி குணசேகரன் இல்லாமல் வெளியான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ! லேட்டஸ்ட் அப்டேட்..

மேலும் இந்த பிரச்சனை குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு புகார் அளித்தேன். அப்புகாரியின் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்னை அழைத்து விசாரணை செய்தது. விசாரணையில் அன்றைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் மற்றும் தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர் முன்னிலையில் கிக் ஆஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர், அதர்வா சரியாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் விஷால் அவர்கள் என்னை அழைத்து இந்த பிரச்சனைக்கான முடிவு எடுப்பதற்கு நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். அன்றைய சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூறியதன் அடிப்படையில் எனக்கு நிகழ்ந்த நஷ்டத்திற்கு ஈடாக, தமிழ் திரைப்பட நடிகர் அதர்வா அவர்கள் மற்றொரு படமான 'மின்னல் வீரன்' என்ற படத்தை, என்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் படம் இயக்குவதற்கான இயக்குனர், இசையமைப்பாளர் ஆகிய அனைவரையும் நடிகர் அதர்வா கூறுபவரையே நியமிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் படம் முடிந்து அதில் வரும் லாபம் அனைத்தும் என்னுடைய நிறுவனமான ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தையே சாரும் என்று கூறினார். மேலும் நடிகர் அதர்வா 'மின்னல் வீரன்' படத்தில் நடித்துக் கொடுப்பதற்கு ஒரு கோடி சம்பளம் தர வேண்டும் என்று கேட்க, நானும் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதி அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதர்வா அவர்களின் சம்பளத்தில் பாதி தொகையை முன் படமாக ரூபாய் 45 லட்சம் பணத்தை கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் அதாவது 7.6.2018 அன்று வங்கி காசோலை மூலம் கொடுத்தேன்.

இது என்னடா ஷாருக்கானுக்கு வந்த சோதனை? இரண்டு முக்கிய இடங்களில் வசூலில் கோட்டை விட்ட 'ஜவான்'!

மேலும் இந்த படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்கள், இசையமைப்பாளர்கள், ஆகியோருக்கும் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதர்வாவிடம் படம் பற்றி பேசுவதற்காக சென்றபோது சரியாக எந்த பதிலும் தராமல் அலட்சியப்படுத்தி சென்று விட்டார். மேலும் ஏற்கனவே நடிகர் அதர்வாவால் 5 கோடியே 50 லட்சம் பணத்தை  இழந்து பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளேன். அதனை சரி செய்வதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியதால் மேலும் 1 கோடியே 19 லட்சத்தை 25 ஆயிரம் பணத்தை நடிகர் அதர்வாவை நம்பி கொடுத்த ஏமாற்றம் அடைந்து விட்டேன். 

1 கோடியே 19 லட்சத்து 25 ஆயிரம் பணத்தில், நடிகர் அதர்வாவை தவிர மற்ற கலைஞர்களுக்கு நான் கொடுத்த பணத்தினை திரும்ப கொடுத்து விடுவதாக கூறினார்கள். இல்லையெனில் என்னுடைய நிறுவனத்தில் அடுத்த படத்திற்கு வேலை பார்ப்பதாக ஒப்புக் கொண்டார்கள். மேலும் இது குறித்து நடிகர்  அதர்வாவின் அலுவலகம் சென்று பலமுறை பேசியும், தொடர்பு கொண்டு என்னுடைய பணத்தை அவரிடம் கேட்டபோது 15 லட்சம் பணத்தினை தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்தார். நடிகர்  அதர்வாவால் பெரும் நஷ்டம் அடைந்துள்ளேன். என்னுடைய இழப்பீடு தொகையை  அவர் மூன்று மாதத்திற்குள் திரும்ப கொடுத்து விடுவதாக கூறி இன்று வரையிலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

நடிகர் தனுஷ், சிம்பு, உட்பட நான்கு முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட்..! திரையுலகில் பரபரப்பு..!
 

இது குறித்து நான் பலமுறை நடிகர் அதர்வா அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என பார்க்க போனபோது, அவர் என்னை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டார். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்த ஒரு தீவும் கிடைக்கவில்லை, எனவே நான் இது குறித்து, சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரியின் போது வேப்பேரி போலீசார் 15.1.2019 அன்று மாலை 4 மணி அளவில் காவல் ஆணையர் அலுவலக வேப்பேரிக்கு மனு சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் ஆஜராகும்படி தெரிவித்தனர் அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் 27.11.2019 அன்று வேப்பேரி காவல் நிலையத்தில் இரண்டாவதாக புகார் அளித்த நிலையில், போலீசார் தரப்பிடம் இருந்து சினிமா பட விநியோகஸ்தம் மற்றும் நடிப்பு சம்பந்தப்பட்ட இந்த பிரச்சனையானது முற்றிலும் சிவில் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதால், தங்களது மனு மீது குற்ற நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிவிட்டனர்.

நடிகர் அதர்வாவால் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எவ்வாறு ஈடு செய்வது என்ற நடவடிக்கையில் இருக்கும் போது, கொரோனா ஊரடங்கால் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிப் போயிருந்தது. எனவே இப்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பார்வைக்கு எனது மனுவை எடுத்து வந்துள்ளேன். ஐயா அவர்கள் என்னுடைய மனுவை ஏற்றுக்கொண்டு, நான் நடிகர் அதர்வாவால் நஷ்டம் அடைந்து ஏமாற்றிய தொகையான 6 பொடியை 10 லட்சம் பணத்தினை திரும்ப பெற்று தரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் இதுகுறித்து புகார் அளித்ததற்காக தற்போது அதர்வா மீது குற்றம் இருப்பதை அறிந்து, அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் வழங்கி உள்ளது.

திருமணமாகி 10 வருடத்திற்கு பின் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

மேலும் தயாரிப்பாளர் மதியழகன், பணத்தை கேட்டால் அரசியல்வாதிகளை வைத்து அதர்வா மிரட்டுவதாகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவையும் மதிப்பதில்லை படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல், பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும்... அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாக வேதனையோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

click me!