Arun Vijay : அருண் விஜய் நடிப்பில் அடுத்த படம்.. களமிறங்கும் SK பட இயக்குனர் - நேரில் வந்து வாழ்த்திய லோகேஷ்!

First Published Apr 4, 2024, 3:51 PM IST

Actor Arun Vijay : பிரபல நடிகர் அருண் விஜய் இப்பொது பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் "வணங்கான்" படத்தில் நடித்து  வருகின்றார். இந்நிலையில் அவரது 36 படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Maan Karate

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "மான் கராத்தே" என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் திருக்குமரன். அதன்பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலின் "கெத்து" என்கின்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தார்.

Anna serial : விஷ ஊசி போட்ட பரணி... உயிர்பயத்தில் ஊரைவிட்டே ஓடிய பாண்டியம்மா - அண்ணா சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

movie poojai

இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் உருவாக உள்ள அவருடைய 36வது திரைப்படத்தை, இயக்குனர்  திருக்குமரன் இயக்க உள்ள நிலையில், அப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது, இதில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினார்.

Kollywood Actress

இந்த கதையை இயக்குனர் திருமுருகன் தன்னிடம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறினார் என்றும், இது ஒரு மிகச்சிறந்த படமாக என்றும் லோகேஷ் கனகராஜ் கூறினார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை தான்யா ரவிச்சந்திரன் மற்றும் "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தில் நடித்த சித்தி இத்னானி ஆகிய இரு நாயகிகள் நடிக்கவுள்ளனர். 

தொலைச்சத தேடி எடுத்துட்டு வாங்க... வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா; லால் சலாம் OTT ரிலீசுக்கு வந்த சிக்கல்?

click me!