Aamir Khan: வன்முறை தான் படமா? லோகேஷ் கனகராஜ் - நெல்சன் திலீப் குமாரை விமர்சித்த டாப் ஹீரோ!

First Published Dec 7, 2023, 12:46 PM IST

பாலிவுட் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமீர்கான், தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிகளை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு மேக்கிங் தெரியவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

பாலிவுட்டில் தரமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து, நடித்தும் தயாரித்தும் பிரபலமானவர் அமீர்கான். குறிப்பாக இவர் தயாரித்து நடித்த 'தங்கல்' திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதேபோல் இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் ஹிந்தியில் வெளியிட்ட பாகுபலி 2 தி conclusion, ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் சாப்டர் 2, ஜவான், பதான், போன்ற படங்களும் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்த படங்களாகும்.

மேலும் ஹிந்தியில் லகான், ரங் தே பசந்தி, பிகே, லால் சிங் சண்டா, போன்ற சிறந்த படங்களில் அமீர் கான் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக இவர் தயாரித்து நடித்த 'லால் சிங் சந்தா' திரைப்படம் வெளியானது. 

KPY Bala: 200 குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த விஜய் டிவி குக் வித் கோமாளி பாலா! குவியும் பாராட்டு!
 

கடந்த மூன்று ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கும் அமீர்கான், கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக சென்னை காரப்பாக்கம் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி வசித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் வெளுத்து வாங்கிய மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இவருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் குடும்பத்திற்கும்  நடிகர் அஜித் வியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமீர் கான், மூன்று முன்னணி இயக்குனர்களை விமர்சிக்கும் விதமாக கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமார், 'லியோ' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மற்றும் அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்க போன்ற இயக்குனர்களுக்கு சரியான மேக்கிங் தெரியவில்லை. வன்முறையை மையமாக வைத்தே படம் எடுத்து வருவதாக தெரித்துள்ளார். 

புயல்ல இதுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குது! குட்டை டவுசரில் குதூகலம் செய்த ஷிவானியை.. கழுவி ஊற்றும் நெட்டிசங்கள்!

நடிகை ரோஜாவின் கணவர்.... இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் - சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும்... ஒரு படம் என்பது அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருக்க வேண்டும், வன்முறையாக இருக்க கூடாது... என்று ஓப்பனாக கூறியுள்ளார் நடிகர் அமீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!