45,000 கொடுத்தும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.. சேர்களை அடித்து நொறுக்கி ரசிகர்கள் ஆவேசம்! போலீஸ் தடியடி!

Published : Dec 13, 2025, 01:37 PM IST

மெஸ்ஸியை அருகில் இருந்து நீண்ட நேரம் பார்க்கலாம் என பணத்தை வாங்கி நம்ப வைத்து விட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றி விட்டனர் ரூ.45,000 கொடுத்தும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

PREV
14
இந்தியா வந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி

பிரபல கால்பந்து வீரர் அர்ஜெண்டினா அணி கேப்டன் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். 

இதன்பின்பு மெஸ்ஸி கொல்கத்தாவின் லேக் டவுனில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் நிறுவப்பட்டுள்ள தன்னுடைய 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மெஸ்ஸியை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகனுடன் சந்தித்தார்.

24
கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்துக்கு வந்த மெஸ்ஸி

இதன்பின்பு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்துக்கு வந்தார். அங்கு மெஸ்ஸியை பார்ப்பதற்காக ரூ.5,000 முதல் ரூ.45,000 வரை பணம் கொடுத்து டிக்கெட்டுகள் வாங்கி மைதானத்துக்கு வந்திருந்தனர். 

காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி மைதானத்தில் திரண்டிருந்த பல ஆயிரக்கனக்கான ரசிகர்களை பார்த்து கையசத்தார். ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டு தங்களது செல்போனில் அவரை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

34
20 நிமிடங்களில் சென்ற மெஸ்ஸி

பின்பு கொல்கத்தா அணி வீரர்களின் ஜெர்சியில் மெஸ்ஸி கையெழுத்து போட்டார். மெஸ்ஸியை ரசிகர்கள் சூழ்ந்துவிடாத வண்ணம் அவரை சுற்றி முழுமையான பாதுகாப்பு அரண் போடப்பட்டு இருந்தது.

தொடர்ந்து மெஸ்ஸி மைதானத்தில் நீண்ட நேரம் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் ரூ.45,000 வரை பணம் கொடுத்து வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

44
சேர்களை அடித்து நொறுக்கி ரசிகர்கள் ஆவேசம்

மெஸ்ஸியை அருகில் இருந்து நீண்ட பார்க்கலாம் என பணத்தை வாங்கி நம்ப வைத்து விட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏமாற்றி விட்டனர் ரூ.45,000 கொடுத்தும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். 

மேலும் மெஸ்ஸியை பார்க்க முடியாத ஆவேசத்தில் மைதானத்தில் நாற்காலிகளை அடித்து நொறுக்கியும், தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி வீசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள் கேலரியில் இருந்து மைதானத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டனர். 

அங்கு இருந்த காவலர்கள் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். மெஸ்ஸி வரவேற்பு கொண்டாட்டம் களேபரமாக மாறியதால் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories