Cristiano Ronaldo to Marry Girlfriend Georgina Rodriguez
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியும், ஐந்து குழந்தைகளின் தாயுமான ஜார்ஜினா ரோட்ரிகஸை நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரொனால்டோ, ஜார்ஜினா ஜோடி கடந்த 2016ம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
25
கிறிஸ்டியானோ ரொனால்டோ-ஜார்ஜினா ரோட்ரிகஸ் ஜோடி
2016ம் ஆண்டு ஒரு கடையில் ஜார்ஜினா வேலை பார்த்தபோது ரொனால்டோ அவரை முதன்முதலாக சந்தித்தார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அன்று முதல் தொடங்கிய இவர்கள் இருவரின் பயணம் நீண்ட நாள் உறவுக்கு பிறகு திருமணமாக மலர உள்ளது. ஜார்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரொனால்டோ தனக்கு அணிவித்த பிரம்மாண்டமான நிச்சயதார்த்த மோதிரத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ''இந்த வாழ்விலும், என் வாழ்நாள் முழுவதும் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று அவர் மகிழ்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.
35
ரொனால்டோவின் அழகிய குடும்பம்
ரொனால்டோவின் முதல் மகன் கிறிஸ்டியானோ ஜூனியர், வாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டை குழந்தைகள் ஈவா மற்றும் மேடியோ, மற்றும் ஜார்ஜினாவுக்கு பிறந்த அலனா மார்ட்டினா, பெல்லா எஸ்மரால்டா என இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள் உள்ளனர். இதில் இரட்டை ஆண் குழந்தைகளில், ஏஞ்சல் என்ற ஒரு குழந்தை பிறந்தவுடன் உயிரிழந்து விட்டது. ஜார்ஜினாவுக்கு ரொனால்டோ அணிவித்த மோதிரத்தில் பொருத்தப்பட்டுள்ள வைரம் 15 முதல் 30 காரட் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ரொனால்டோ பரிசளித்த மோதிரத்தின் விலை இத்தனை கோடியா?
இந்த மோதிரத்தின் விலை ரூ.16 கோடி முதல் ரூ.42 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜென்டினாவில் பிறந்த ஜார்ஜினா, ஸ்பெயினின் ஜாகா நகரில் வளர்ந்தார். அவர் தனது சிறு வயதிலேயே நடனப் பயிற்சி பெற்றார். மாட்ரிட்டில் உள்ள ஒரு குஸ்ஸி கடையில் விற்பனை உதவியாளராக பணிபுரிந்தபோது தான் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
55
யார் இந்த ஜார்ஜினா?
இருவரின் காதல் உறவு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஜார்ஜினா ஒரு மாடலாகவும், சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்கவராகவும் ஆனார். இவர் தனது வாழ்க்கையை விவரிக்கும் "ஐ ஆம் ஜார்ஜினா" என்ற நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜார்ஜினா ஜோடி திருமணம் செய்ய உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.