கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை அர்ஜெண்டினா அணி வென்றது. ஃபைனலில் ஃபிரான்ஸ் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் 24 வயதான ஃபிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்தார்.
ஃபிஃபா உலக கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸ் அணிக்காக தனி ஒருவனாக போராடி பெனால்டி கோலுடன் சேர்த்து மொத்தமாக 4 கோல்களை விளாசி, சர்வதேச கால்பந்து ரசிகர்களின் இதயங்களை வென்றார் எம்பாப்பே.
எம்பாப்பே செம ஃபிட்னெஸான வீரர். உலக கோப்பை போட்டிகளின்போது அதிவேகமாக ஓடிய வீரர் எம்பாப்பே தான். உலகின் அதிவேக கால்பந்து வீரராகவும் எம்பாப்பே அறியப்படுகிறார். போலந்துக்கு எதிரான போட்டியில் மணிக்கு 35.2 கிமீ வேகத்தில் எம்பாப்பே ஓடியதாக ஃபிஃபா அறிவித்தது.
எம்பாப்பேவின் ஃபிட்னெஸ் ரகசியத்தையும், அவரது டயட்டையும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அதுகுறித்து தெரிந்துகொள்வோம்.
எம்பாப்பே ஒருநாளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக 6 முறை உணவு எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார். பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர் ஆகிய 3 வழக்கமான உணவுகளுடன், மேலும் 3 முறை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் எடுக்கிறார்.
அதிவேக கால்பந்து வீரராக அறியப்படும் எம்பாப்பே, தினமும் உடற்பயிற்சி செய்கிறார். ஃபிட்னெஸுக்காக ரன்னிங், சைக்கிளிங்கும் செய்கிறார். உடலை வலுப்படுத்துவதற்கான மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். உடற்பயிற்சி மேற்கொள்வதிலும் எந்த காரணத்திற்காகவும் சமரசம் செய்துகொள்வதில்லை. ஸ்டாமினாவை அதிகப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.