லியோனல் மெஸ்ஸியை காண நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பல மணி நேரம் காத்துக்கிடந்த அவர்கள் மெஸ்ஸியை பார்த்ததும் உற்சாகமாக கோஷம் போட்டனர்.
2011-க்குப் பிறகு மெஸ்ஸி இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை. 'GOAT இந்தியா டூர் 2025' என்ற திட்டத்தின்படி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள லியோனல் மெஸ்ஸி, இன்று காலை முக்கிய நபர்களை சந்தித்தார்.
70 அடி உயர தனது சிலையை திறந்து வைத்தார்
பின்பு கொல்கத்தாவின் லேக் டவுனில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் நிறுவப்பட்டுள்ள தன்னுடைய 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கொல்கத்தாவின் தெற்கு டம் டம் பகுதியில் உள்ள லேக் டவுனில் 70 அடி உயர இரும்புச் சிலையை ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப் நிறுவியுள்ளது.
இந்தச் சிலை, மெஸ்ஸி ஃபிஃபா உலகக் கோப்பையை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறது. இது அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை வெற்றியின் அடையாளமாக உள்ளது.