அட யோகி பாபுவின் மகனா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..!

First Published | Jul 23, 2022, 10:47 PM IST

நடிகர் யோகி பாபு, நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்... நடிகை சஞ்சனா சிங் இவருடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது யோகி பாபுவின் மகனுடன் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

கைவைசம் எக்கச்சக்க படங்களை வைத்துக் கொண்டு பிசியாக வலம் வரும் யோகிபாபு கடந்த 2020 ஆம் ஆண்டு,  பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு, இவர்களுக்கு விசாகன் என்கிற அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

மேலும் செய்திகள்: எதற்கும் துணிந்தவள் ரேகா நாயர்! சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து.. படு மோசமாக டேமேஜ் செய்த பயில்வான்!
 

Tap to resize

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபுவிற்கு, நடிகை சஞ்சிதா சிங் யோகி பாபுவின் வீட்டிற்கே சென்று தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அப்போது இவர் யோகி பாபுவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும், யோகிபாபுவின் மகன் விசாகனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: முட்ட பாயும் காளை.. எகிறி ஓடும் சூர்யா.. ஏறுதழுவ பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்ட 'வாடிவாசல்' படக்குழு!
 

இந்த புகைப்படங்களில் யோகி பாபுவின் மகன்,  மிகவும் கியூட்டாக அவரது மடியில் அமர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும், யோகி பாபுவின் மகன் நன்றாக வளர்ந்து விட்டதாக கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்/

காமெடி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய நிலையில், இதே சந்தோஷத்தில் நேற்று தன்னுடைய பிறந்தநாளையும் படு குஷியாக வீட்டிலேயே மிகவும் எளிமையாக குடும்பத்தினரோடு கொண்டாடியுள்ளார்.

மேலும் செய்திகள்: 'கிரே மேன்' படத்தில் வந்தது 10 நிமிஷம் கூட இல்ல; ஹாலிவுட் நடிகரிடம் மோசமாக திட்டு வேற வாங்கிய தனுஷ்!
 

Latest Videos

click me!