எதற்கும் துணிந்தவள் ரேகா நாயர்! சித்ராவின் காண்டம் மேட்டரை இழுத்து.. படு மோசமாக டேமேஜ் செய்த பயில்வான்!

First Published | Jul 23, 2022, 8:57 PM IST

நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் நடுரோட்டில் தன்னிடம் சண்டை போட்ட ரேகா நாயரை படு டேமேஜ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

நடிகரும், இயக்குனருமான, பார்த்திபன் இயக்கத்தில் அவரே நடித்து இயக்கிய திரைப்படமான 'இரவின் நிழல்'  சமீபத்தில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும், தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று, வெற்றிகரமாக ஓடி வருகிறது. படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும், படத்தில் நடித்த நடிகைகள் தானாக வாயை விட்டு அடுத்தடுத்த பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே 'இரவின் நிழல்' படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்த, பிரிகிடா சேரி மக்கள் அப்படிதான் பேசுவார்கள் என ஊடகம் ஒன்றில் பேசி சர்ச்சையில் சிக்கி வாங்கி கட்டிக் கொண்டார். இதைத்தொடர்ந்து பார்த்திபன் இவர் சார்பில் மன்னிப்பு கேட்ட பின்னர் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்தப் பிரச்சனை அடங்குவதற்குள், 'இரவின் நிழல்' படத்தில் அரை நிர்வாணமாக  நடித்த மற்றொரு நடிகையான ரேகா நாயரை, திரைப்பட விமர்சகர் பைவான ரங்கநாதன் விமர்சனம் செய்து பேசியதற்காக, இரண்டு நாட்களுக்கு முன்பு பீச்சில் வாக்கிங் சென்றவரிடம், "நான் நிர்வாணமாக நடித்தால் உனக்கென்ன என்றும் நான் உன் பொண்டாட்டியா? என கன்னா பின்னா என்று வாயில் வந்த வார்த்தைகளால் வசை பாடி இருந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
 

Tap to resize

ரேகா நாயர் காட்டு கத்து கத்தியபோது,  பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து நின்ற பயில்வான் ரங்கநாதன், இந்த சண்டைக்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். சாதாரணமாகவே நடிகர் - நடிகைகளை பற்றி பேசி வம்பிழுக்கும் இவர், இவரிடமே ஒரு நடிகை பிரச்சனை செய்தால் சும்மா விடுவாரா என்ன... விஜே சித்ராவின் காண்டம் மேட்டர் வரை கேள்விகளை எழுப்பி படு டேமேஜ் செய்துள்ளார்.
 

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ரேகா நாயர் தன்னிடம் சண்டை போட்டது ஒரு செட்டப் செய்த நாடகம் என்று கூறியுள்ளார். ரேகா நாயர் என்னிடம் நன் நிர்வாணமாக நடித்தால் உனக்கென்ன என்று கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல்... தன்னுடைய சட்டையை தூக்கி காட்டி மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், பயில்வான் ரங்கநாதன் வசைபாடியுள்ளார். அதே போல் ரேகா நாயர் மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் அறையில் காண்டம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதை ஏன் அவர் போலீஸிடம் சொல்லவில்லை என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்: 'கிரே மேன்' படத்தில் வந்தது 10 நிமிஷம் கூட இல்ல... ஹாலிவுட் நடிகரிடம் மோசமாக திட்டி வேற வாங்கிய தனுஷ்!
 

நான் அவரிடம் அருவருப்பாக பேசவில்லை, நான் தவறாக பேசி இருந்தால் என்னை பற்றி போலீசில் புகார் கொடுத்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்த போது அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கொடுத்திருப்பதாகவும், எனக்கு இருக்கும் ஆதரவை பார்த்து பொறாமையில் தன்னிடம் இப்படி மோசமாக ரேகா நாயர் சண்டையிட்டதாகவும் கூறியுள்ளார். 
 

அதேபோல் ரேகா நாயர் எதற்கும் துணிந்தவள் என்றும் அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க போவதாகவும், ஆண்கள் தான் பெண்களை கையைப் பிடித்து இழுப்பார்கள் ஆனால் ரேகா நாயர் என் கையை பிடித்து இழுத்து சண்டை போட்டார். நான் கோபப்பட்டு இருந்தால் என்னவாயிருக்கும். இந்த சட்டம் பெண்களுக்கு தான் ஆதரவாக இருக்கும் என தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியுள்ளார் பயில்வான்... 
 

மேலும் செய்திகள்: 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு தேசிய விருது வாங்கிய பழங்குடி பெண் நஞ்சியம்மா யார் தெரியுமா?
 

சினிமாவில் திறமையை மட்டும் காட்டி நடியுங்கள் என்றும் அந்தரங்க உறுப்புகளையும் சதையையும் காட்டாதீர்கள் என்றும் கூறி... ரேகா நாயரின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் பனங்காட்டு நரி நான் அல்ல,   தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் பார்த்திபனையே அவதூறாக அவர் விமர்சனம் செய்வதாக தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
 

Latest Videos

click me!