Published : Jul 23, 2022, 05:43 PM ISTUpdated : Jul 23, 2022, 05:52 PM IST
விஷ்ணு விஷால் தற்போது பாலிவுட் நடிகர் போல நிர்வாண புகைப்படம் வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்
வெற்றிகளுக்காக போராடி வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிற விஷ்ணு விஷால். வளர்ந்து வரும் நடிகரான இவர் வெண்ணிலா கபடி குழு என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக நீர்ப்பறவை படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதுகளை தட்டி சென்று இருந்தார் விஷ்ணு விஷால். இவரின் சமீபத்தை படமான எஃப் ஐ ஆர் வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றிகளை பெற்றிருந்தது. இந்த படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருந்தார்.
இதில் கௌதம் வாசுதேவ் மேனன் மஞ்சிமா மோகன் பிரபா மோனிகாசான் ரைசா வில்சன் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்திருந்தனர் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வெளியான இந்த படம் 24 கோடி ரூபாயை வசூலாக பெற்று இருந்தது.
34
Vishnu Vishal
தற்போது மோகன்தாஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதற்கு இடையே இடையே குடும்ப சிக்கல்களிலும் மாட்டியிருந்த விஷ்ணு விஷால் முன்னாள் மனைவி ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்தபி பிறகு ஜவாலா குட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகர் போன்று நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை தனது மனைவி எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் பிரபல பத்திரிக்கையின் அட்டை பக்கத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பு இருந்த நிலைகளை, தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தற்போது பாலிவுட் நடிகர்கள் ரேஞ்சுக்கு நிர்வாண புகைப்படம் வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.