நடிகர் தனுஷ் நடித்த 'தி கிரே மேன்' திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் போதிலும், தனுஷின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
26
நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பு திறமையின் காரணமாக, தமிழ் படங்களை தொடர்ந்து, இந்தி படங்களிலும் நடிக்க துவங்கினார். இதை தொடர்ந்து, ஹாலிவுட்டிலும் அவருக்கு நடிக்க அழைப்புகள் வர துவங்கியது. அந்த வகையில் ஏற்கனவே தனுஷ் ஹாலிவுட்டில், The Extraordinary Journey of the Fakir என்கிற படத்தில் நடித்துள்ள நிலையில், இரண்டாவதாக அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்தில் நடித்தார்.
தனுஷ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இப்படம் வெளியான நிலையில், இறுதியில் தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதற்க்கு முக்கிய காரணம் மொத்த திரைப்படத்தில் தனுஷின் Avik San கதாபாத்திரம் 10 நிமிடத்திற்கு குறைவாகவே வருகிறது.
46
ஒரே ஒரு சண்டை காட்சியில், ஹீரோ - ஹீரோயினோடு சண்டை போட்டு சில முக்கிய ஆதாரங்கள் அடங்கிய பென்ட்ரைவை வில்லனிடம் கொடுப்பது, அவர்கள் கெட்டவர்கள் என்பது தெரிந்த உடன், தனக்கு பணம் முக்கியம் இல்லை என, ஹீரோயினிடம் அந்த பென்ட்ரைவை ஒப்படைப்பது என இரண்டு காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார்.
மேலும் வில்லன் தனுஷை... இந்த நாய்க்கு பணம் எதுவும் கொடுக்காதீர்கள் என கூறுவது, 'தி கிரே மேன்' தமிழ் டப்பிங்கில் இடம்பெற்றுள்ளது, பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது. தனுஷ் இந்த படத்தில் வந்தது 10 நிமிடம் கூட இல்ல... இதுல நாய்னு வேற திட்டு வாங்கணுமா? என நெட்டிசங்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
66
ஆனால் மொத்த படமாக இதை பார்க்கும் போது... ஜேம்ஸ் பாண்டு படத்தை பார்த்தது போல் ரசிகர்களை கவர்கிறது. எல்லாம் ஓகே தான் தனுஷுக்கு அதிக காட்சிகள் இல்லத்துக்கு தான் இவ்வளவு பில்டப்பா? என்றும் சிலர் கிசுகிசுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.