பொங்கல் வின்னர் அஜித்தின் துணிவா - விஜய்யின் வாரிசா? ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்ட பரபரப்பு ட்வீட்!

First Published | Jan 16, 2023, 10:38 AM IST

இந்த வருட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களில், பொங்கல் வின்னர் யார்? என்பது குறித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

விஜய்- அஜித் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இரண்டு படங்களும் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகும் நிலையில், தமிழகத்தில் 'துணிவு' திரைப்படம் இதுவரை 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வாரிசு திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

Tap to resize

மேலும் உலக அளவில் 'துணிவு' திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடியை எட்டிய நிலையில், 'வாரிசு' திரைப்படமும் தற்போது 100 கோடியை எட்டி உள்ளது. அதைப்போல் ஜனவரி 14ஆம் தேதி 'வாரிசு' திரைப்படம் தெலுங்கில் வெளியாகி டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளே படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. அதே போல் 'துணிவு' திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் இப்படத்தின் வெற்றியை கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சமுத்ரகனிக்கு இவ்வளவு பெரிய மகன் - மகளா? குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் வைரல்!

இந்நிலையில் இரண்டு படங்களுக்குமே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெளியீட்டு உரிமையையும், ' வாரிசு' திரைப்படத்தை தமிழகத்தில் சில பகுதிகளிலும் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்,  பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது.

இதில் அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என நடுதரமாக தன்னுடைய பதிவை போட்டுள்ளதால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் மாஸ் காட்டிய விஜய்... வாரசுடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளது தெரியுமா?

Latest Videos

click me!