நடிகர் சமுத்திரக்கனி முதல் முறையாக, தன்னுடைய குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட, உங்களுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ் திரை உலகில், பன்முக திறமைகளுடன் விளங்கும் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி முதல் முறையாக தன்னுடைய குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
26
samuthirakani
தமிழ் திரையுலகில், தற்போது முன்னணி குணச்சித்திர நடிகராக இருந்து வரும் சமுத்திரக்கனி... சீரியல் இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை துவங்கி, பின்னர் திரைப்பட இயக்குனர், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், இயக்குனர் என தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்.
இயக்குனர் சமுத்திரகனி கடந்த 2003 ஆம் ஆண்டு 'உன்னை சரணடைந்தேன்' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் எழுதி, இயக்கிய முதல் படமே, சிறந்த எழுத்தாளருக்கான 'தமிழ்நாடு ஸ்டேட் விருதை' வென்றது.
46
இதை தொடர்ந்து நடிகர் சசிக்குமாரை வைத்து இவர் இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. கமர்ஷியல் படங்கள் இயக்குவதை விட. தன்னுடைய படத்தில் ஏதேனும் கருத்தை ரசிகர்களுக்கு கூற வேண்டும் என்கிற ஈடுபாட்டுடன் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை குவித்தது.
சமீப காலமாக திரைப்படங்கள் இயக்குவதை விட, பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வரும் சமுத்திரக்கனி... தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாள, போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
66
இவரைப் பற்றி ரசிகர்களுக்கு தெரிந்த அளவிற்கு இவருடைய குடும்பத்தை பற்றி யாருக்கும் தெரியாது. தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் எவ்வித சமூக வலைத்தளங்களிலும் இவர் வெளியிடுவதில்லை. இந்நிலையில் முதல் முறையாக, தன்னுடைய மகன்,மகள், மனைவியோடு பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை நடிகர் சமுத்திரக்கனி வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.. மேலும் இவருடைய குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் - மகளா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.