இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், இன்று பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். பொங்கல் கொண்டாட்டத்தின் போது மகன் குகன் தாஸ், மகள் ஆராதனா மற்றும் மனைவி ஆரத்தி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், “உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ! பொங்கல்!! அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.