குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகும் அனைவருமே, முன்னணி ஹீரோயினாக திரையுலகில் ஜெயித்து விடுவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக 'தொடரி', சூர்யா ஜோடியாக 'தானா சேர்ந்த கூட்டம்' விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' , 'சர்கார்' என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் சில தோல்வி படங்களை கொடுத்தாலும்... இவர் கதையின் நாயகியாக நடித்த 'மகாநடி' திரைப்படம் இமாலய வெற்றியை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. குறிப்பாக தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வரும் 'மாமன்னன்', ஜெயம் ரவியுடன் 'சைரன்' ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், இந்த வருட பொங்கலை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
மஞ்சள் நிற பட்டுப் புடவையில், ஸ்லீவ் லெஸ் அழகில், மண்பானையில் பொங்கல் வைத்து இந்த பொங்கலை வரவேற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பாக கீர்த்தி சுரேஷின் இந்த பொங்கல் செலிப்ரேஷனில், சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான், சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா..? நடிகர் ஷியாமுக்கு ஷாக் கொடுத்த தளபதி..!