தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த மயில்சாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு (பிப்ரவரி 19ஆம் தேதி) திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய மகன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய மயில்சாமியின் மகன், தன்னுடைய தந்தை இறந்து இரண்டு நாட்களுக்கு பின்பு தான் செல்போனை எடுத்துப் பார்த்ததாகவும், அதில் தந்தையின் மரணம் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி இருந்தது. சில youtube தளங்கள் தன்னுடைய தந்தை டீ குடித்துக் கொண்டிருக்கும் போது இறந்து விட்டதாகவும், கோவிலில் இருக்கும் போது இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் முதலில் தந்தைக்கு என்ன நடந்தது என்பதை கூறுகிறேன்.
18ஆம் தேதி தன்னுடைய தந்தை டப்பிங் பணியை முடித்துவிட்டு வந்ததும், மகா சிவராத்திரி அன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு நான், என்னுடைய தந்தை, என்னுடைய தாயார் கிளம்பி சென்றோம். செல்லும் வழியிலேயே சாப்பிட்டு விட்டு தான் கோவிலுக்கு சென்றோம். அங்கு சிறிது நேரம் என் தந்தை இருந்தார். அப்போது சிவமணிக்கும் போன் செய்து என் தந்தை வர வைத்தார். தந்தை இதய நோயாளி என்பதால், சிவமணியே நீங்கள் வீட்டிற்கு கிளம்பி சென்று ஓய்வெடுக்கும் படி கூறினார்.
தனுஷின் பெற்றோரை இப்படித்தான் நடத்தினார்களா ரஜினியின் குடும்பம்? வைராக்கியதோடு வீடு கட்டியதன் பின்னணி!
வீட்டிற்கு நாங்கள் வந்த பின்னர், அதிகாலை நேரத்தில் தனக்கு பசிக்கிறது ஏதாவது சாப்பிடலாமா என சொன்னார். நானும் என் தந்தையும் சாப்பிட்டோம். சாப்பிட்ட உடனே, உணவு நெஞ்சிலையே இருப்பது போல் இருக்கிறது என கூறினார். அவருக்கு சாப்பாடு செரிக்கவில்லை என்றால் வெந்நீர் குடிப்பார். எனவே சுடுதண்ணீர் கொடுத்தேன். தண்ணீர் குடித்துவிட்டு தூங்கும்படி கூறிவிட்டு... நானும் மாடியில் உள்ள என்னுடைய அறைக்கு சென்று படுத்தேன்.
10 நிமிடத்தில் என்னுடைய தாயார் வந்து அப்பா மூச்சு விட கஷ்டப்படுவதாக கூறினார். நான் சென்று பார்த்தபோது, அவர் சிரமத்துடன் மூச்சுவிட்டார் உடனடியாக காரில் அவரை ஏற்றிக்கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கிளம்பினேன். தெருமுனைக்கு செல்லும் போதே... அவர் என் மீது சரிந்து விழுந்து விட்டார். அவரை பிடித்துக்கொண்டு காரை ஓட்ட சிரமமாக இருந்ததால், கரை ஓரமாக பார்க் செய்துவிட்டு, ஆட்டோவில் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
லோ நெக் கவர்ச்சியில்.... கிழிந்த உடையில் அப்பட்டமாக அந்த இடத்தை காட்டி அனிகா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்!
அப்போது அங்கு இருந்த மருத்துவர்கள் தந்தையை பரிசோதித்து விட்டு அவர் இறந்ததாக தெரிவித்தனர். எனினும் தன்னுடைய தந்தை இறக்கவில்லை என்ற ஒரு நம்பிக்கையில், ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போன் செய்து விட்டு, உடனே தன்னுடைய தந்தையை ஆம்புலன்ஸ் மூலம் அங்கு அழைத்து சென்றதாகவும், ஆனால் அங்கும் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து இந்த தகவல் வெளியாகி வெளியானது இதுதான் உண்மையில் நடந்தது என பேசி உள்ளார்.