இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, கே.ஆர்.விஜயா, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த திரைப்படம் சந்திரமுகி.
இந்த படத்தில், மீண்டும் ரஜினிகாந்தை நடிக்க வைக்க பி.வாசு முடிவு செய்த நிலையில், ரஜினிகாந்த் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாது என கூறவே, இந்த வாய்ப்பு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்றது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பது உறுதியாகி 2 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில், லைகா நிறுவனம் மிகப்பெரிய தொகையில் தயாரிக்கும் இந்த படத்தின் BTS புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக நடிகர் வடிவேலு ராகவா லாரன்சுடன் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது இந்த படத்தில் வடிவேலுவின் காமெடியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் உள்ளது.