குழந்தை நட்சத்திரமாக, மலையாள திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழிலும், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அஜித்தை வைத்து இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் இவரை நடிக்க வைத்தார்.
ஆனால் தற்போது அனிகாவுக்கு 18 வயது நிரம்பி விட்டதால், ஹீரோயின் வாய்ப்புகளை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் தெலுங்கில் ஹீரோயினாக நடித்த 'புட்ட பொம்மா' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குழந்தை நட்சத்திரமாக இருந்து, ஹீரோயினாக ஆனதும் இப்படியா? என பலர் தொடர்ந்து அனிகாவை விமர்சனம் செய்து வந்த நிலையில், ஏன் இந்த படத்தில் பல்வேறு லிப் லாக் காட்சியில் நடித்தேன் என அவரே விளக்கம் ஒன்றையும் கொடுத்தார்.
இது காதல் படம் என்பதால், இது போன்ற லிப் லாக் காட்சிகள் கதைக்கு மிகவும் முக்கியம் என என்னிடம் கதை சொல்லும் போது இயக்குனர் எடுத்து கூறினார். கதைக்கு அந்த காட்சிகள் தேவை என்பதால் மட்டுமே நடித்தேன் என தெரிவித்தார்.
ஏற்கனவே நயன்தாராவை இமிடேட் செய்வது போல், சில புகைப்படங்களை வெளியிட்ட அனிகா... தற்போது கருப்பு நிற கிழுந்தது போன்ற மாடல் உடையில் தொடையழகை காட்டி வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வழக்கம் போல் லைக்குகளை குவித்து வருகிறது.