மாலத்தீவில் ‘மால டம் டம்... மஞ்சர டம் டம்’னு கவர்ச்சி பொங்க ஆட்டம் போடும் மிருணாளினி - வைரலாகும் ஹாட் போட்டோஸ்
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மிருணாளினி, அங்கு கடற்கரையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவர் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார்.
இதையடுத்து அந்த ஆண்டே சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் என்கிற திரைப்படம் மூலம் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் மிருணாளினி.
இதன்பின்னர் மிருணாளினிக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததாக ஜாங்கோ என்கிற பேண்டஸி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... சாகப்போறேன்னு சிரிச்சுகிட்டே சொன்னான்... மகன் மடியில் உயிரை விட்ட மயில்சாமி - பிரபலம் பகிர்ந்த எமோஷனல் தகவல்
அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனது எனிமி திரைப்படத்தின் மூலம் தான். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், அதில் இடம்பெறும் டம் டம் என்கிற பாடல் வேறலெலவில் ஹிட் அடித்தது. அந்த பாடலில் வைரல் ஹிட் அடித்ததற்கு மிருணாளினியின் நடனமும் ஒரு காரணம். அதற்காகவே ஏராளமானோர் அப்பாடலை ரிப்பீட் மோடில் கேட்டு ரசித்தனர்.
இதையடுத்து விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்த மிருணாளினி தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் கைவசம் 2 படங்கள் உள்ளன.
இப்படி பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மிருணாளினி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பொதுவாக மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நடிகைகள் அங்கு விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அதே பார்முலாவை தான் நடிகை மிருணாளினியும் பின்பற்றி உள்ளார். மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து நடிகை மிருணாளினி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.
இதையும் படியுங்கள்... காந்தாரா 2-வில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்..? இயக்குனர் ரிஷப் ஷெட்டி கொடுத்த அல்டிமேட் ஹிண்ட்