தமிழ் சினிமாவில் திறமையான நடிகர் என பெயர் எடுத்ததோடு... 2 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளவர் நடிகர் தனுஷ். வயதானவர் தோற்றத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கும் நிலையில், மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக 'அசுரன்' படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். குறிப்பாக சில படங்களில், தனுஷை தவிர... மற்ற நடிகர்களை கற்பனை கூட செய்து முடியாது என்றும் ரசிகர்கள் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் திறமை கொண்டவர்.
அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுக்கு... பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் கிடைக்காத வரவேற்பு தனுஷுக்கு மட்டுமே கிடைத்தது. இதுவே இவரின் திரையுலக வாழ்க்கையின் மிகப்பெரிய பலம் எனலாம். நடிப்பை தாண்டி, இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், என பன்முக திறமையை வளர்த்து கொண்டவர் தனுஷ்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெங்கி அட்லூரி நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்... தனுஷ் அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும், 'கேப்டன்' மில்லர் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால் தன்னுடைய புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தில்... ரசிகர்கள் பலரை வரவைத்து அவர்களுக்கு பிரமாண்ட விருந்து கொடுத்தார். தனுஷ் தன்னுடைய ரசிகர்கள், ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரை ஆச்சரியப்படுத்தியது.
Dhanush
தன்னுடைய மகளை தனுஷ் திருமணம் செய்து கொண்ட பின்னர், தனுஷின் பெற்றோரை தன்னுடைய குடும்பத்துடன் சரிசமமாக நடத்தாமல் எப்போதுமே, இரண்டாம் தரத்திலேயே தான் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் நடத்தியதாகவும், ஐஸ்வர்யாவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஜினி மற்றும் தனுஷுக்கு இடையே சில மனஸ்தாபமும் இருந்ததாக கூறப்படுகிறது.
Dhanush
மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா என அந்த வீட்டில் ஆனந்தமாக குடும்பம் நடத்த ஆசைப்பட்ட தனுஷ்... எதிர்பாராத சில கருத்து வேறுபாடு காரணமாக காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட, மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார்.