ஆரம்ப பள்ளியில்.. குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!

Published : Aug 15, 2023, 06:26 PM IST

நடிகர் விஷால், 77-ஆவது இந்திய சுதந்திர தினத்தை காரைக்குடி அருகே உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் கொண்டாடியுள்ளார்.   

PREV
14
ஆரம்ப பள்ளியில்.. குழந்தைகளுடன்  சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!

நமது இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

24

தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், இதை தொடர்ந்து படப்பிடிப்பு முழு கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. 

தெறிக்க... முரட்டு வில்லனாக மிரட்டும் ஹரோல்டு தாஸ்.! 'லியோ' படத்தில் இருந்து வெளியான அர்ஜுனின் கிலிம்ஸி வீடியோ

34

இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட விஷால், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.  பின்னர் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு சில வார்த்தைகளை பேசி சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 200 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபரணங்களை தனது தேவி அறக்கட்டளை சார்பில் வழங்கினார் விஷால்.

44

சில நிமிடங்கள் ஆனந்தமாக மாணவச்செல்வங்களுடன் நேரம் செலவிட்ட விஷால், பின்னர் அங்கிருந்து கிளம்பினார். இவரது சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories