இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான 'பீஸ்ட்' மாபெரும் தோல்வி படமாக அமைந்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய ஜெயிலர், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக 'ஜெயிலர்' கடந்த வாரம், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் ஜெயிலர் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான நிலையில், அணைத்து பகுதியும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். படம் வெளியாகி 5 நாட்கள் ஆன பிறகும், இப்படம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி கொண்டிருக்கிறது. அதே போல் இதுவரை சுமார் 350 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் திரையரங்குகளில் 'ஜெயிலர்' திரைப்படம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்களும் வெளியாகி வருகிறது.
இந்திய குடியுரிமை பெற்றுவிட்டேன்! சுதந்திர தினத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்!
ஜெயிலரின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கலாநிதி மாறனின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சன் நெஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே படம் சன் நெஸ்ட் (Sun NXT) பிளாட்ஃபார்மில் ஒளிபரப்பாகும். மேலும், சன் நெட்வொர்க் அதன் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் பதிப்புகளில் ஜெயிலரின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது.