இலங்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வெளியானது. கொழும்பு மற்றும் அங்குள்ள அணைத்து தீவுகளிலும் வெளியாகி, திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறது. ஒவ்வொரு நாளும், ரஜினிகாந்தின் ரசிகர்கள் இப்படத்திற்கு தங்களின் மாஸ் வரவேற்பை கொடுத்துவருகிறார்கள்.
ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற 'ஜெயில'ர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயக், மிர்னா மேனன் மற்றும் பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க, சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
மேலும் ஜெயிலர் படம் ரிலீசான அன்று, இலங்கையில் ரசிகர்கள் காட்சி அதிகாலை 6 மணிக்கு பிரபல ஷாப்பிங் மால், ஒன் கேல் ஃபேஸ் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கம், பிவிஆர் லங்காவில் திரையிடப்பட்டது. இலங்கையில் ரஜினிகாந்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்உள்ளதால், பல ரசிகர்கள் முதல் நாள் முண்டி அடித்துக்கொண்டு திரையரங்கிற்கு வந்து முதல் நாள், முதல் கட்சியைபார்த்தனர். அதே போல் ஒவ்வொரு நாளும், 'ஜெயிலர்' படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன், முன்பதிவு செய்து படம் பார்த்து வருகிறார்கள்.
காமெடியில் மட்டும் அல்ல... சென்டெமெண்டாக நடித்து ரசிகர்களை அழ வைத்த வடிவேலுவின் 6 முக்கிய படங்கள்!
72 வயதிலும், ரஜினிகாந்தின் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பு... உலக அளவில் பலரை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறலாம். ஓய்வு பெற்ற ஜெயிலர் வேடத்தில்... கனகச்சிதமாக பொருத்தி நடித்துள்ள ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரியான தன்னுடைய மகன் அநியாயமாக கொலை செய்யப்படவே, ஆடும் ருத்ர தாண்டவம் தான் 'ஜெயிலர்' திரைப்படம். ஜெயிலர் படம் இலங்கையில் மட்டுமே முதல் நாள் 2 கோடி வசூல் செய்த நிலையில், 5 நாட்கள் ஆகியும் கொஞ்சம் கூட குறையாமல் ஓவ்வொரு நாளும் மாஸ் காலெக்க்ஷனை அல்லி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.