அட்ரா சக்க... வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்..! 5-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

First Published | Aug 15, 2023, 11:03 AM IST

ஆகஸ்ட் 10ஆம் தேதி, வெளியான 'ஜெயிலர்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில், ரஜினிகாந்த் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது.
 

கடைசியாக வெளியான சில படங்களில், ரஜினியின் மாஸ் நடிப்பை எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்களுக்கு இப்படம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடுவது போல் அமைந்துள்ளதால் ரசிகர்களும் செம்ம குஷி ஆகி உள்ளனர்.

காமெடியில் மட்டும் அல்ல... சென்டெமெண்டாக நடித்து ரசிகர்களை அழ வைத்த வடிவேலுவின் 6 முக்கிய படங்கள்!
 

Tap to resize

மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன்  இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப்  போன்றோர் நடித்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி படையப்பா படத்தில் ரஜினிகாந்துடன்  நீலாம்பரியாக நடித்து  மிரளவைத்த ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்துள்ளார். மகனாக வசந்த் ரவியும் ரஜினிகாந்தின் மருமகளாக மிர்ணாவும் நடித்துள்ளனர். விநாயகன் வில்லனாவும், யோகி பாவு வழக்கம் போல் கச்சிதமாக தன்னுடைய காமெடியை செய்துள்ளர்.

இப்படம் பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளில் வெளியான நிலையில் ,அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. முதல் நாளிலேயே 100 கோடி வசூலை நெருங்கிய இந்த திரைப்படம், இரண்டாவது நாளில் 150 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது ஜெயிலர் திரைப்படம் 5-ஆவது நாள் முடிவில் 350 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் 500 கோடியை இப்படம் நெருங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கதாநாயகன் அவதாரம் எடுக்கும் ஹாலிவுட் இயக்குனர் சந்தீப் ஜே.எல்!

Latest Videos

click me!