இப்படம் குறித்து இயக்குநரும், நடிகருமான சந்தீப் ஜே.எல் கூறுகையில், “அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி, உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நாயகன் சந்தீப் ஜே.எல், சந்தர்ப்ப சூழ்நிலையால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்ள, அவரை அந்த கும்பல் துரத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து நாயகனை மற்றொரு மாஃபியா குழுவின் தலைவன் பாபு ஆண்டனி காப்பாற்ற முயற்சிக்கிறார்.