தமிழ் திரையுலகில் தற்பொழுது most wanted இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் கண்ட திரைப்படம் தான் விக்ரம். உலக நாயகனின் ரசிகனான லோகேஷ் கனகராஜ், தான் சிறுவயதில் இருந்து நேசித்த ஒரு நடிகருக்காக இயக்கி வெளியிட்ட திரைப்படம் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமல்ஹாசன் வழக்கம்போல தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார்.