நிழல்கள் ரவி தான் தற்போது விக்ரம் குறித்து பேசி உள்ளார். ஆதித்ய கரிகாலனாக நடித்த வருகிறார் விக்ரம். சுந்தர சோழனின் ஆட்சியில் பட்டத்து இளவரசனாகவும், வடக்குப் படைகளின் தளபதியாகவும் இருந்தவர் ஆதித்ய கரிகாலன். இவர் சுந்தர சோழனின் மூத்த மகன் அருண்மொழிவர்மன் மற்றும் குந்தவையின் மூத்த சகோதரர் ஆவார். இந்த ரோல் குறித்தான விக்ரமின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது அதில் குதிரை மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் சீயானை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...குடும்பத்துடன் வாழ்த்து சொன்ன சூர்யா, விஜய்சேதுபதி.. நட்சத்திர பெருவிழாவாக நயன் - விக்கி வெட்டிங் ..
இவர் குறித்து சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகர் நிழல்கள் ரவி, விக்ரமின் டெடிகேஷன் குறித்து கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரம் காலை 7:30 மணிக்கு குதிரையில் ஏறி அன்றைய நாள் முழுவதும் டயலாக்குகளை பேசி மாலை ஐந்து மணிக்கு தான் இறங்கினார். அதுதான் அவருடைய டெடிகேஷன் என்று கூறியுள்ளா.ர் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !