Published : Jul 10, 2022, 11:58 AM ISTUpdated : Jul 10, 2022, 12:03 PM IST
நாயகர்களின் பேச்சு வைரலானதோ இல்லையோ அவர்களது உடை தற்போது பரபரப்பாக பேசபப்டுகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, உள்ளிட்டோர் வெஸ்டர்ன் ஸ்டைல் உடையணிந்து வந்திருந்தனர்.
மணிரத்தினம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த டீசர் தற்போது 20 மில்லியன் வியூவர்ஸை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விழா குறித்தான ஒரு சர்ச்சையும் கிளம்பிவிட்டது.
25
ponniyin selvan teaser event photos
டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் ஐஸ்வர்யாராய் தவிர்க்கு மற்ற நடிகர்கள் கலந்து கொண்டனர். நாயகர்களின் பேச்சு வைரலானதோ இல்லையோ அவர்களது உடை தற்போது பரபரப்பாக பேசபப்டுகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார் உள்ளிட்டோர் வெஸ்டர்ன் ஸ்டைல் உடையணிந்து வந்திருந்தனர்.
தற்பொழுது பஞ்சாயத்திற்கே தலைவரான ப்ளூ சட்டை மாறன் இதை வைத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார், இவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வரக்கூடாது என இயக்குனர் மணிரத்தினம் கோரிக்கை விடுத்தாரா? அல்லது ஆர்டர் போட்டாரா? ஏன் யாருமே வேட்டி அணிந்து டீசர் வெளியிட்டு விழாவிற்கு வரவில்லை என்கிற கேள்வியை மாறன் எழுப்பி உள்ளார். தற்போது இது தான் நெட்டிசன்களின் பேசும் பொருளாக மாறி உள்ளது.
பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் தமிழ் மன்னனான ராஜா ராஜா சோழன் குறித்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்பற்றியது. இயக்குனரின் நீண்ட நாள் கனவான இந்த படம் தற்போது உயிர் பெற்றுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர்கள் வருகின்றனர். அதோடு கமழும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்டவர்கள் குறித்த போஸ்டர் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது டீசரை ரசிகர்கள் வெறிந்தனமாக வைரலாக்கி வருகினர். கோட்டைகள், போர்க்களம் என பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் கட்டாயம் ரூ.1000 கோடியை நெருங்கும் என யூகிக்கப்பட்டுள்ளது.