கடந்த எட்டாம் தேதி மதியம் திடீரென விக்ரமுக்கு நெஞ்சு வலியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது இதை அடுத்து இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனையில் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது.
மேலும் செய்திகளுக்கு..நயன் - விக்கி திருமணத்திற்கு மேட்சிங்... மேட்சிங்.. உடையில் வந்து அசத்திய சூர்யா - ஜோதிகா!! செம்ம கியூட்...
பின்னர் விக்ரமின் மேலாளர் சூரியநாராயணன் இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்தார். அவர் சமூக வலைதளத்தில், "விக்ரமுக்கு சாதாரண நெஞ்சு வலி மட்டுமே ஏற்பட்டதாகவும், தற்போது சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் உள்ளதாகவும், சியான் உடல் நலம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.