விஜய் சேதுபதி மனைவியா இது? நயன்தாரா - விக்கி திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம் வைரல்!!

First Published | Jul 9, 2022, 11:33 PM IST

நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு குறிப்பிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டு, இந்த நட்சத்திர தம்பதியை வாழ்த்திய நிலையில், விஜய் சேதுபதி அவரது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
 

நயன்தாரா ரசிகர்கள், 5 வருடங்களுக்கு மேலாக எழுப்பி வந்த கேள்வி என்றால் அது அவரது திருமணத்தை பற்றி தான். இந்த வருடம்... அடுத்த வருடம் என திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே சென்ற இந்த காதல் ஜோடி ஒரு வழியாக இந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
 

திருமணம் முடிந்த கையோடு ஹனி மூன், சென்ற நயன் - விக்கி ஜோடி அங்கு எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்: விக்ரம், தர்பார், கைதி என 'போதை பொருளை' அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட முக்கிய 10 தமிழ் படங்கள்.! மேலும் பார்க்க...
 

Tap to resize

இந்நிலையில் மீண்டும் ஷாருக்கானுடன் நடிக்கும் 'ஜவான்' படத்தில் நயன்தாரா நடிக்க துவங்கி விட்டார். அதே போல், விக்னேஷ் சிவனும் அவரது பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: நயன் - விக்கி திருமணத்திற்கு மேட்சிங்... மேட்சிங்.. உடையில் வந்து அசத்திய சூர்யா - ஜோதிகா!! செம்ம கியூட்...
 

இவர்களது திருமணம் நடந்து ஒரு மாதம் ஆக போகும் நிலையில், அடிக்கடி தங்களுடைய சமூக வலைத்தளத்தில், திருமணம் குறித்த புகைப்படங்களை வெளியிடுவதை இந்த ஜோடி வழக்கமாக வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: ஆளே மாறிப்போய் வித்தியாசமாக இருக்கும் அதுல்யா! மூஞ்சில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? ஷாக்கிங் போட்டோஸ்!
 

Nayanthara Vignesh shivan wedding

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணிரத்னம், அட்லீ, ஷாருகான், சூர்யா, ஜோதிகா போன்றோர் திருமணத்தில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிய புகைப்படத்தை பகிர்ந்த நயன்தாரா தற்போது விஜய் சேதுபதி தன்னுடைய மனைவியுடன் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியின் மனைவி ஜெசி அழகிய பட்டு புடவையிலும், விஜய் சேதுபதி வேஷ்டி சட்டையிலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Latest Videos

click me!